இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஆந்திர மாநிலத்தில் கடந்த மே 5ஆம் தேதி அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், மேலும் ஜுன் 10ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அத்தியாவசியக் கடைகள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,400 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில், 94 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.