ETV Bharat / bharat

புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு

author img

By

Published : Jun 8, 2021, 7:32 AM IST

புதுச்சேரியில் ஊரடங்குத்  தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று(ஜுன்.8) முதல் மதுபானக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Pondicherry
புதுச்சேரி

புதுச்சேரி: மாநிலத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, ஜுன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கரோனா பரவல் குறைந்ததையடுத்து, ஊரடங்கை சில தளர்வுகளுடன் ஜுன் 14ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,

  • 'இன்று(ஜுன்.8) முதல் அனைத்துக் கடைகளும் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படலாம். ஆனால், பார்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
  • மாலை 5 மணி வரை புதுச்சேரியில் பேருந்துகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • பூங்காக்கள், திரையரங்குகள், மல்டிஃபிளெக்ஸ், பொழுதுபோக்கு மையங்கள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காட்டுப் பணியாளர்களுடன் இயங்கலாம்.
  • உணவகங்களில் பார்சல் மட்டுமே மாலை 5 மணி வரை தர அனுமதி வழங்கப்பட்டுள்ளது' இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட, ஒரு மாதத்துக்குப் பின்னர் மதுக்கடைகள் திறப்பதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.