புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன்படி, மதுபானக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும், 8ஆம் தேதி முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
43 நாள்களுக்குப் பிறகு மதுபானஜ் கடைகள் திறக்கப்பட்டதால், மதுப் பிரியர்கள் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இதனால் விற்பனையும் அதிகமாக இருந்தது. வழக்கமாக புதுச்சேரியில் மூன்று முதல் நான்கு கோடி ரூபாய் வரை மட்டுமே மதுபானம் விற்பனையாகும்.
மதுக்கடைகள் திறக்கப்பட்ட 8ஆம் தேதியன்று ஏழு கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாகவும் நேற்று (ஜூன் 9) 5 கோடியில் இருந்து 6 கோடிவரை மதுபானம் விற்றதாகவும், இரண்டு நாள்களில் 12 கோடி ரூபாய் அளவில் மதுபானம் விற்றதாகவும் கலால் துறை தெரிவித்துள்ளது.