ராய்பூர்: சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள ஜக்தல்பூர் சுண்ணாம்பு சுரங்கத்தில் இன்று (டிசம்பர் 2) திடீரென மண் சரிவு ஏற்பட்டதில் 6 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் மண்ணுக்கடியில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தீயணைப்புத் துறை அலுவலர்களுடன் சம்பவயிடத்துக்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே மாநில பேரிடர் மீட்புக்குழுவினரும் மீட்புப் பணியில் இணைந்துள்ளனர். இதுகுறித்து நகர்நார் போலீசார் கூறுகையில், இந்த விபத்தின்போது 20-க்கும் மேற்பட்டோர் மண்ணுக்கடியில் சிக்கியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை 5 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 2 பேரை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அவர்கள் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த பெண் தற்கொலை