பாட்னா: பிகார் ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், "பாங்கா மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஏழு பேர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சூழலில் அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உறுதுணையாக இருக்கும். உயிரிழந்தவர்களுக்கு அமைதி கிடைக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, நேற்று ஒடிசாவில் மின்னல் தாக்கியதில் மூன்று பெண்கள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்று பெண்கள், இரண்டு சிறுமிகள் உள்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி ட்விட்டர் கணக்கு தற்காலிக முடக்கம்!