பொகாரோ: ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தின் ஜைனமோடில் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 மற்றும் 2 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வராண்டாவில் அமர்ந்தவாறு இன்று வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் மதியம் 12.30 மணியளவில் லேசான மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
பின்னர் கடுமையாக மின்னல் தாக்கியதில், அங்கிருந்த 30 மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் பொகாரோ பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் நான்காம் வகுப்பு பயின்று வந்த மாணவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த எதிர்பாராத நிகழ்வு பெற்றோர், உறவினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாணவி ஸ்ரீமதி உடல் சொந்த ஊரில் அடக்கம்