ETV Bharat / bharat

'இலவசங்கள் மூலம் தடுப்பூசி போட ஊக்கப்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்'

இலவசங்கள், பரிசுத் திட்டங்கள் மூலமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை ஊக்கப்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்
author img

By

Published : Jun 18, 2021, 10:24 AM IST

புதுச்சேரி: கரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுச்சேரியை மாற்றவும் அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அதனடிப்படையில், வாராந்திர கரோனா தொற்று மேலாண்மை சீராய்வுக் கூட்டம் நேற்று (ஜூன் 17) துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமை தாங்கினார். மேலும் இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் அஷ்வனி குமார், காவல் துறை கூடுதல் இயக்குநர் ஆனந்த மோகன், உள்ளாட்சித் துறைச் செயலர் வல்லவன், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அப்போது தற்போதைய கரோனா நிலவரம், தடுப்பூசி நிலவரம், கறும்பூஞ்சை நோயின் தாக்கம், மருந்துகளின் கையிருப்பு ஆகியவை குறித்து படக்காட்சி மூலம் விளக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய தமிழிசை, “புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவல் வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஆனாலும் அது முற்றிலுமாகக் குறையும் வரையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கரோனா நோய்த்தொற்று, தடுப்பூசி ஆகிய இரண்டு கூறுகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்தால் ஒழியே நோய்த்தொற்றை குறைப்பது அரிது. இலவசங்கள், பரிசுத் திட்டங்கள் மூலமாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களை ஊக்கப்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால்தான் கரோனா மூன்றாவது அலையை நாம் எதிர்கொள்ள முடியும். ஆகவே, தடுப்பூசி போடுவதை நாம் விரைவுபடுத்த வேண்டும்.

அரசு மருத்துவமனைகளின் மருத்துவ உள்கட்டமைப்புகளைப் பொறுத்தவரை நாம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறோம். தனியார் நிறுவனங்கள் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய இக்கட்டான சூழலை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

கரோனா தொற்று இல்லாத சூழலை உருவாக்கும் நம்முடைய இலக்கை அடைய நாம் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.

மக்களிடம் அதிகம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. முகக் கவசம் அணிந்திருக்கிறார்கள். தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து நடக்கிறார்கள். இது மகிழ்ச்சியைத் தருகிறது. அவர்களின் ஒத்துழைப்போடு மூன்றாவது அலையை நாம் எளிதாக எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

விடுபட்ட முன்களப்பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வது அவர்களுக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கும் பாதுகாப்பானது” எனக் கூறினார்.

இதையும் படிங்க: குழந்தைகளை தத்தெடுக்க சட்டப்பூர்வமாக அணுகுங்கள்- மருத்துவர் கேப்டன் அகஸ்டஸ் சாமுவேல் டாட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.