ETV Bharat / bharat

நிலவின் தென் பகுதியில் சல்பர் இருப்பதை கண்டறிந்த பிரக்யான் ரோவர்! - LIBS

Sulphur (S) on the lunar surface: நிலவின் மேற்பரப்பில் அலுமினியம் (Al), சல்பர் (S), உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான ரோவர் உறுதிபடுத்தியுள்ளது.

நிலவின் தென் பகுதியில் ஆகிசிஜன் இருப்பதை கண்டறிந்து பிரக்யான ரோவர்
isro-latest-update-pragyan-rover-detects-oxygen
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 9:42 PM IST

ஹைதராபாத்: சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கடந்த ஆக்ஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதனால் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் புதிய சரித்திர சாதனையை பெற்றது, இந்தியா. இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்கு நாட்களுக்குப் பின்னர், இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனம் சந்திரயான்-3இன் ஆரம்ப கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதில் நிலவின் தென் துருவத்தைச் சுற்றியுள்ள மண்ணின் வெப்பநிலையை ஆய்வு செய்து விகரம் லேண்டர் அதன் தகவல்களை அனுப்பியுள்ளது. இதன்படி, சந்திரயான்-3இன் பிரக்யான் ரோவர், நிலவின் தென் துருவத்தில் வெப்பத்தை ஆய்வு செய்வதற்காக நிலவின் மேற்பரப்பிற்கு அடியில் 10 சென்டி மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்துள்ளது.

  • Chandrayaan-3 Mission:

    In-situ scientific experiments continue .....

    Laser-Induced Breakdown Spectroscope (LIBS) instrument onboard the Rover unambiguously confirms the presence of Sulphur (S) in the lunar surface near the south pole, through first-ever in-situ measurements.… pic.twitter.com/vDQmByWcSL

    — ISRO (@isro) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நிலவின் தென்துருவத்தின் வெப்பநிலை பதிவு செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும். இதன்படி இஸ்ரோ வெளியிட்டுள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள வெப்பநிலை -10 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 29) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சந்திரயான்-3 ரோவரில் பொருத்தப்பட்டுள்ள லேசர் பேலோட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி இயந்திரம் முதன் முதலில் நிலவின் தென் துருவத்தில் உள்ள மேல் பரப்பை அளவீடு செய்து அடிப்படை தனிம கலவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும். இதன்படி நிலவின் மேற்பரப்பில் சல்பர் (S) இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது.

LIBS என்பது விஞ்ஞான தொழில் நுட்பமாகும். இந்த தொழில் நுட்பம் லேசர் மூலமாக தனிமங்களை ஆய்வு செய்யும். அதிவேக லேசர் நிலவின் மேற்பரப்பில் உள்ள கற்கள் மற்றும் மண் ஆகியவற்றை ஆய்வு செய்யும் திறன் கொண்டது. இந்த லேசர் பிளாஸ்மாவை உருவாக்கி ,அதனை பல்வேறு கருவிகள் கொண்டு மாறி மாறி ஆய்வுகள் செய்து, அது எந்த வகையான தனிமம் என்பதை தீர்மானிக்கிறது.

நிலவின் முதற்கட்ட ஆய்வின்படி, வரைபடம் மூலம் கணக்கீடு செய்து அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) மற்றும் டைட்டானியம் (Ti) ஆகிய தனிமங்கள் நிலவின் மேற்பரப்பில் இருப்பதையும் மேலும் மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது. மேலும், ஹைட்ரஜன் உள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெங்களூருவில் உள்ள எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வகத்தில் LIBS பேலோட் என்ற இயந்திரம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Pragyan Rover: நிலவின் வெப்பத்தை பதிவு செய்த ரோவர்.. லேண்டர் அனுப்பிய தகவல்.. இஸ்ரோவின் லேட்டஸ்ட் அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.