டெல்லி: உலகின் சக்தி வாய்ந்த மிக முக்கிய நாடுகளான இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகளை தன்னகத்தே கொண்ட அமைப்பாக ஜி20 அமைப்பு திகழ்ந்து வருகிறது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஜி20 உச்சி மாநாடு இன்றும்,நாளையும் (செப்டம்பர் 9 மற்றும்10) தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது.
ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு, ஆண்டுதோறும் அந்தந்த உறுப்பினர்கள் சார்ந்த நாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த 2023ஆம் ஆண்டிற்கான, உசி மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று உள்ளது.
தலைநகர் டெல்லியில், ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள உலகத் தலைவர்களை பாரத் மண்டபத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் வைத்து பிரதமர் மோடி வரவேற்றார்.
ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் நான் வருத்தமடைகிறேன். அங்குள்ள மக்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து உலக நாடுகளின் தலைவர்களையும் இந்தியா வரவேற்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில், அசோகர் தூண் உள்ளது. அதில் மனிதகுலத்தின் நலன் மற்றும் நலன் உறுதி செய்யப்பட வேண்டும் என்று பிராகிருத மொழியில் எழுதப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
-
My remarks at Session-1 on 'One Earth' during the G20 Summit. https://t.co/loM5wMABwb
— Narendra Modi (@narendramodi) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My remarks at Session-1 on 'One Earth' during the G20 Summit. https://t.co/loM5wMABwb
— Narendra Modi (@narendramodi) September 9, 2023My remarks at Session-1 on 'One Earth' during the G20 Summit. https://t.co/loM5wMABwb
— Narendra Modi (@narendramodi) September 9, 2023
தொடர்ந்து அவர் பேசியதாவது, "இன்று சர்வதேச அளவில் நிலவும், நம்பிக்கையின்மை நிலையை, மனிதநேய அணுகுமுறையுடன் கடைப்பிடித்து, நம்பகத்தன்மையுடன் மாற்றும் பொருட்டு, உலகை ஒன்றிணைக்க, இந்தியா சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் அனைவரும் ஒற்றுமை உடன் செயல்பட வேண்டிய காலம் இது. எதிர்கால சந்த்தியினருக்கு பெரும் சவாலாக அமைந்து உள்ள உணவு , எரிபொருள் மேலாண்மை, பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் நாம் உறுதியான தீர்வைக் காண முயல வேண்டும்.
உலகத்தை, புதிய திசையில் இட்டுச் செல்ல இந்த 21ஆம் நூற்றாண்டு மிக முக்கியமான காலகட்டம் ஆகும். நமக்கு முன் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் போது, தோன்றும் பழைய பிரச்சினைகளை, மனிதநேய அணுகுமுறை உடன் கடைப்பிடித்து, இதற்கு தீர்வு காண்பது அவசியமாகும். கரோனா பெருந்தொற்றை வென்ற நம்மால், இந்த நம்பிக்கையின்மை நிகழ்வையும் எளிதாக வெல்ல இயலும்.
ஜி20 நாடுகள் அமைப்பின் நிரந்தர உறுப்பினராக, அதற்கான இருக்கையில் அமருமாறு, ஆப்பிரிக்க யூனியன் தலைவரும், கொமோரஸ் ஒன்றியத்தின் அதிபருமான அஜாலி அசெளமானிக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: LIVE: G20 Summit : ஜி20 உச்சி மாநாடு தொடக்கம்! உலக தலைவர்கள் பங்கேற்பு!