ETV Bharat / bharat

Leo Movie: பதானை மிஞ்சிய லியோ.. வெளிநாடுகளில் தெறிக்கவிடும் டிக்கெட் விற்பனை.! வரலாற்று சாதனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 9:10 AM IST

Leo Is The Highest Grossing Film Overseas: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ திரைப்படத்தின் வெளிநாட்டு டிக்கெட் விற்பனை வரலாற்று சாதனை படைத்து உள்ளது. உலக அளவில் லியோ படத்திற்கு 32 ஆயிரத்து 500 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததாக படக்குழு தெரிவித்து உள்ளது.

Leo setting new benchmarks
பதானை மிஞ்சிய லியோ

டெல்லி: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் "லியோ". இந்த படம் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெளியிட்டுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், ப்ரியா ஆனந்த், கிரண், சாண்டி, பாபு ஆன்டனி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலரும் நடித்து உள்ளனர்.

லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளதால், வெளிநாடுகளில் 6 வாரங்களுக்கு முன்னரே படத்தின் முன்பதிவு துவங்கியது. இதுகுறித்து, வர்த்தக ஆய்வாளர் தரன் ஆதர்ஷ் கூறியதாவது, "லியோ திரைப்படம் இங்கிலாந்து நாட்டில் ஒரு நாளில் மட்டும் 32 ஆயிரத்து 500 டிக்கெட்கள் வரை விற்று சாதனை புரிந்து உள்ளது.

இதற்கு முன்னதாக, ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் டிக்கெட்கள் விற்பனையில் முன்னிலையில் இருந்தது. தற்போது பதானை மிஞ்சி உள்ளது லியோ படம்" என்றார். மேலும், தரன் ஆதர்ஷ் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் லியோ போஸ்டரைப் பகிர்ந்து கூறியதாவது, "விஜயின் லியோ திரைப்படம் புதிய மார்க்கெட்டை உருவாக்கி உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் லியோ படத்திற்கான டிக்கெட்கள் முன்பதிவு துவங்கியது. முன்பதிவு துவங்கிய உடனே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்கள் விற்று தீர்ந்ததாக தெரிவிக்க்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் வெளியாகும் திரைப்படங்களில் இந்திய சினிமா வரலாற்றிலே தமிழ் மொழி படத்திற்கு கிடைத்த எதிர்பாராத வரவேற்பு மற்றும் சாதனை எனக் கூறப்பட்டு உள்ளது.

இதன் மூலம் உலக அளவில் நடிகர் விஜயின் மார்க்கெட் உயர்ந்து உள்ளதாகவும், உள்ளூர் படங்களுக்கு வெளிநாடுகளில் கிடைக்கும் வரவேற்பும் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இரு தினங்களுக்கு முன்னதாக, லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் "badas" என்கின்ற பாடலை படக்குழு வெளியிட்டது.

இந்த பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, படம் வெளியாக 19 நாட்களே இருக்கும் நிலையில் லியோ திரைப்படம் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. வெளியீட்டிற்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் ஒரு படம் சென்சாருக்கு அனுப்பப்படுவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:‘பதானை’ மிஞ்சிய ‘ஜவான்’ - பாக்ஸ் ஆபிஸ் கிங் ஷாருக்கானின் புதிய சாதனை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.