ஜம்மு: நாட்டிலேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மிகக் குறைந்த குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக தேசிய குடும்ப சுகாதாரத்தின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில், இமாச்சலப் பிரதேசம், கோவா, நாகாலாந்து, கேரளா மற்றும் புதுச்சேரியில் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
மேலும் இந்தக் கணக்கெடுப்பில், நாட்டில் 6 சதவீத பெண்கள் சட்டப்பூர்வ 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இது, ஆந்திராவில் 33 சதவீதம் அஸ்ஸாமில் 32 சதவீதம், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூவில் 28 சதவீதம், தெலுங்கானாவில் 27 சதவீதம், மற்றும் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 25 சதவீதமாக உள்ளது.
இதற்கு முன், காஷ்மீரில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக இருந்தன. இப்போது அரசின் திட்டங்கள் மற்றும் தீவிர கண்காணிப்பு மூலம் இது சாத்தியமாகியுள்ளது. இந்திய சட்டத்தின்படி, நாட்டில் பெண்களுக்கு திருமண வயது 18 ஆகவும், ஆண்களுக்கு திருமண வயது 21 ஆகவும் உள்ளது.
இதையும் படிங்க: ஹஜ் யாத்திரை: முதல் விமானம் 377 பயணிகளுடன் கொச்சியிலிருந்து கிளம்பியது