திரவ மருத்துவ ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று மும்பையில் இருந்து புறப்பட்டு, கோலாப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகப்படியான நிரப்புதல் காரணமாக கோவிட் -19 சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட உயிர் காக்கும் வாயுவை ஏற்றி வந்த டேங்கரில் கசிவு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சதாரா மாவட்டத்தின் புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6.15 மணியளவில் நடந்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இது குறித்து அறிந்த தொழில்நுட்பக்குழுவினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து கசிவை சரிசெய்தனர். அதன் பின்னரே டேங்கர் முன்னோக்கி பயணிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் அலுவலர் ஒருவர் கூறினார்.
வீணான ஆக்ஸிஜனின் அளவு குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை. தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில் மகாராஷ்டிரா கடந்த மாதம் முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. தற்போது மாநில அரசு எல்.எம்.ஓ ஒதுக்கீட்டை தினமும் 200 மெட்ரிக் டன் அதிகரிக்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க : மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் வர வேண்டாம் - அரசாணை வெளியீடு!