ரக்ஷா பந்தன் என்பது சகோதரத்துவத்தைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.
இன்று (ஆக. 22) கொண்டாடப்பட உள்ள இப்பண்டிகை, உடன் பிறந்த மற்றும் உடன் பிறவா சகோதர சகோதரிகளிடையே பாச பிணைப்பை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், " ரக்ஷா பந்தன் நன்னாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், " நாட்டு மக்களுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துகள். சகோதர, சகோதரிகளுக்கு இடையே ஆழமாக வேரூன்றிய அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடு.
இந்நன்னாளில் பெண்களின் கெளரவத்தை நிலைநாட்டவும், அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் உறுதி கொள்வோம்" என பதிவிட்டுள்ளார்.
அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "ரக்ஷா பந்தன் நன்னாளில் அனைத்து நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காபூலில் இருந்து இந்தியர்கள் மீட்பு