தெலங்கானா மாநிலம் ஜக்தியல் மாவட்டத்தில் மடிபள்ளி அருகே எஸ்.ஆர்.எஸ்.பி கால்வாயில் அதிவேகமாக வந்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த வழக்கறிஞர் கட்டிகனேனி அமரேந்தர் ராவ் (58), அவரது மனைவி கட்டிகனேனி சிரிஷா (52), மகள் கட்டிகனேனி ஸ்ரேயா (27), ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ராவின் 19 வயது மகனான கட்டிகனேனி ஜெயந்த் மட்டும், காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே வந்தார். இவர்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஜதாராவில் கலந்து கொள்வதற்காக ஜோகின்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.
கார் விபத்துக்குள்ளானது குறித்து அவ்வழியே வந்த மக்கள், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உள்ளூர் மக்கள் உதவியோடு காரை கால்வாயிலிருந்து வெளியே எடுத்தனர். மூவரின் உடல்கள் கைப்பற்றப்பட்டு உடற்கூராய்வுக்காக ஜக்தியல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கண்டெய்னர் லாரியில் 20 டன் ரேஷன் அரிசி கடத்தல்: லாரி ஓட்டுநர் கைது!