கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று(மே 31) விசாரணைக்கு வந்தது. இதில், ஆஜரான மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், " தேர்வை ரத்து செய்வது தொடர்பாக முடிவெடுக்க மத்திய அரசுக்கு வரும் புதன்கிழமை ( ஜூன்2) வரை அவகாசம் கோரினார்.
இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோரின் அமர்வு, "கடந்தாண்டு மத்திய அரசு எடுத்த முடிவையே தற்போதைய பெருந்தொற்று சூழலிலும் எடுக்கலாம். இந்த முடிவில் அரசு மாற்றம் ஏற்படுத்தும்பட்சத்தில் அதற்கு உரிய காரணங்களை மத்திய அரசு வழங்க வேண்டும்" எனக் கூறியுள்ளது.
பெருந்தொற்றின் முதல் அலை காரணமாக கடந்தாண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்கள் எழுதிய முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: 'தடுப்பூசி கொள்கை' மத்திய அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்