ETV Bharat / bharat

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் - டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது

2021 - 2022ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று (ஜூலை 31) தான் கடைசி நாள் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

author img

By

Published : Jul 31, 2022, 9:23 AM IST

டெல்லி: ஒவ்வொரு நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இன்று (ஜூலை 31) கடைசி நாளாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால், டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்படாது என வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.

இதனடிப்படையில் 2022 - 2023 மதிப்பீட்டு ஆண்டின் கணக்கில், 2021 - 2022ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று ( ஜூலை 31) என அறிவிக்கப்பட்டது. மேலும், ஜூலை 25 வரையிலான நிலவரப்படி, 3 கோடி பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது காலநீட்டிப்பு இல்லாததால் தொழிலாளர்களும், வருமான வரி செலுத்துவோருக்கும் இன்றைய நாள் முக்கியமான ஒன்றாகும். முந்தைய ஆண்டுகள் போல் இந்தாண்டும் காலநீட்டிப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் "Super Tax Payer" நடிகர் ரஜினிகாந்த்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.