ETV Bharat / bharat

கேரளாவில் நிலச்சரிவு... ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு... - Keral lanslide news

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

கேரள நிலச்சரிவில் சிக்கிய குடும்பம் -  இருவர் உயிரிழப்பு

author img

By

Published : Aug 29, 2022, 10:06 AM IST

Updated : Aug 29, 2022, 12:29 PM IST

இடுக்கி: கேரள மாநிலத்தில் தொடர் கனமழை பெய்துவருகிறது. பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இடுக்கி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 29) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடுபுலா அருகே உள்ள கஞ்சார் கிராமத்தில் நடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி போலீசார் தரப்பில், "இந்த நிலச்சரிவு அதிகாலை 2.30 மணியளவில் நடந்துள்ளது. அப்போது சோமன் என்பவரது வீடு நிலச்சரிவில் சிக்கியது.

இதனால் சோமன் உள்பட அவரது தாயார் தங்கம்மா, மனைவி ஷிஜி, மகள் ஷிமா, மகன் தேவானந்த் என 5 பேர் மண்ணில் புதைந்தனர். அதில் தங்கம்மா மற்றும் தேவானந்த் இருவரது உடல்கள் காலை மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 பேருடைய உடல் மதியம் மீட்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Video... நொய்டாவின் இரட்டைக்கோபுரங்கள் தகர்ப்பு

Last Updated : Aug 29, 2022, 12:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.