ETV Bharat / bharat

லாலுபிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை; தந்தைக்கு தானம் வழங்கும் மகள் - சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நடைபெறும் லாலுபிரசத் யாதவின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு, அவரது இரண்டாவது மகள் ரோகினி ஆச்சார்யா தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக வழங்குகிறார்.

லாலுபிரசாத் யாதவ்க்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை; தந்தைக்கு தானமளிக்கும் மகள்

author img

By

Published : Dec 5, 2022, 9:52 AM IST

பாட்னா (பிகார்): பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அவரது மகள் ரோகினி ஆச்சார்யா லாலுவுக்கு சிறுநீரகத்தை தானம் அளிக்கிறார்.

லாலு பிரசாத் யாதவ்-க்கு ஐந்து வெவ்வேறு கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தண்டனையின் பாதி நிறைவடைந்த நிலையில், உடல்நலக் காரணங்கள் மற்றும் வயது முதிர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த வழக்குகள் அனைத்திலும் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தற்போது லாலு பிரசாத் ஜாமீனில் வெளியே உள்ளார்.

லாலு பிரசாத்தின் இரண்டாவது மகள் ரோகிணி ஆச்சார்யா ட்விட்டரில் மிகவும் சுறுசுறுப்பாகவும், நரேந்திர மோடி அரசை விமர்சித்தும் வரும் இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். சமீபத்தில், லாலு பிரசாத் சிங்கப்பூர் சென்றிருந்தார், அங்கு அவருக்கு மருத்துவர்கள் பல பரிசோதனைகளை நடத்தினர். உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் தனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க ரோகினி முடிவு செய்தார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பின் ஒப்புதல் அளித்தனர்.

சிங்கப்பூரில் சிறந்த சிறுநீரக மாற்று வசதி உள்ளது. அங்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களின் வெற்றி விகிதம் மிகவும் நன்றாக உள்ளது. உயிருள்ள நன்கொடையாளரிடமிருந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டால், அதன் வெற்றி விகிதம் 98.11 சதவீதமாகவும், இறந்த பின் தானம் செய்பவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றி விகிதம் 94.88 சதவீதம் ஆகவும் உள்ளது.

இந்தியாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றி விகிதத்தைப் பார்த்தால், இது சுமார் 90 சதவிகிதம். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உயிருடன் இருப்பவரின் சிறுநீரக தானம் மூலம் 12-20 ஆண்டுகள் மற்றும் இறந்த நபரின் சிறுநீரக தானம் மூலம் 8-12 ஆண்டுகள் ஆயுட்காலம் அதிகரிக்கிறது.

அறுவை சிகிச்சைக்கு முன் ரோகினி ட்விட் செய்து தந்தை லாலு பிரசாத் யாதவுக்காக பிரார்த்தனை செய்யுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.”லட்சக்கணக்கான மக்களுக்காக குரல் கொடுத்தவர்கள் இன்று அவர்களுக்காக ஒன்று சேர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்கு முன்னதாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, எம்பி மிசா பார்தி ஆகியோர் சிங்கப்பூர் சென்றடைந்தனர்.

மேலும் இன்று காலை அறுவை சிகிச்சைக்கு முன் ரோகினி ஆச்சார்யா அவரது ட்விட்டரில்,”Ready to rock and roll, Wish me a good luck” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: குஜராத் சட்டசபை 2ஆம் கடட் தேர்தல்... வாக்குப்பதிவு தொடங்கியது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.