புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி பெரும்பான்மையை பெற்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த 7ஆம் தேதி ரங்கசாமி மட்டும் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை.
கடந்த 9ஆம் தேதி மூத்த சட்டப்பேரவை உறுப்பினரான லட்சுமி நாராயணனை, தற்காலிக சபாநாயகராகப் பரிந்துரைத்து, அதற்கான கடிதத்தை ஆளுநருக்கு ரங்கசாமி அனுப்பி இருந்தார்.
![சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகர் நியமனம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08:18:45:1621608525_tn-pud-03-speaker-appoint-tn10044_21052021201041_2105f_1621608041_1033.jpg)
இந்நிலையில், தற்காலிக சபாநாயகர் இன்று (மே.21) நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இன்று சட்டபேரவைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின் அடிப்படையில் புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணனை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நியமனம் செய்துள்ளதாக சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி தெரிவித்துள்ளார்.