உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீதான வன்முறை தாக்குதல் தொடர்பான வழக்கில் உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா அக்டோபர் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஆஷிஷ் மிஸ்ராவை உத்தரப் பிரதேச காவல்துறையினர் இன்று(அக்.11) நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். விசாரணையின்போது ஆஷிஷ் மிஸ்ராவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரப் பிரதேச காவல்துறை அனுமதி கோரியது.
காவல்துறையின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, ஆஷிஷ் மிஸ்ராவை மூன்று நாள் காவலில் வைக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.
லக்கிம்பூர் கேரி பகுதியில் அக்டோபர் மூன்றாம் தேதி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் எட்டு பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறையின்போது விவசாயிகள் மீது காரை ஏற்றியதாக ஆஷிஷ் மிஸ்ரா மீது விவசாயிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் எதிர்க்கட்சிகள் போராட்டம், உச்ச நீதிமன்ற தலையீடு போன்றவற்றால் பூதாகரமான நிலையில் ஆஷிஷ் மிஸ்ரா உத்தரப் பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி வா.. தலைமை ஏற்க வா.. சித்த ராமையா அழைப்பு!