டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள விக்டோரியா கெளரி சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து தெரிவித்தவர் என்றும் அவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக அவரை பரிந்துரை செய்த கொலிஜியம் தனது உத்தரவை திரும்பப் பெறவேண்டும், நீதிபதி நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
"சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீது இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனர். அதனைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனு வரும் 10-ம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்படும்’ என்று உத்தரவிட்டனா். ஆனால், விக்டோரியா கெளரி உள்பட 11 வழக்கறிஞர்கள் மற்றும் 2 மாவட்ட நீதிபதிகளை உயா்நீதிமன்றங்களின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு நேற்று வெளியிடப்பட்டது.
மத்திய அரசின் நியமன உத்தரவை சுட்டிக்காட்டி, விக்டோரியா கெளரி நியமனத்துக்கு எதிரான மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வில் வழக்குரைஞா் ராஜு ராமச்சந்திரன் சாா்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, இன்று( பிப்.7) விசாரணைக்கு பட்டியலிட்டனர்.
-
UPDATE : The hearing is shifted to Court 7.
— Live Law (@LiveLawIndia) February 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A bench of Justices Sanjiv Khanna and BR Gavai will hear.#VictoriaGowri #SupremeCourt #MadrasHighCourt #SupremeCourtOfIndia
">UPDATE : The hearing is shifted to Court 7.
— Live Law (@LiveLawIndia) February 7, 2023
A bench of Justices Sanjiv Khanna and BR Gavai will hear.#VictoriaGowri #SupremeCourt #MadrasHighCourt #SupremeCourtOfIndiaUPDATE : The hearing is shifted to Court 7.
— Live Law (@LiveLawIndia) February 7, 2023
A bench of Justices Sanjiv Khanna and BR Gavai will hear.#VictoriaGowri #SupremeCourt #MadrasHighCourt #SupremeCourtOfIndia
இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.15 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திடீரென பட்டியலிடப்பட்ட வழக்கு என்பதால் நீதிபதிகள் வரவில்லை. இதனால், 7வது அறை எண்ணுக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் கொண்ட இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. சுமார் 10.30 மணிக்கு இந்த வழக்கின் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10.35 மணிக்கு விக்டோரியா கெளரி நீதிபதியாக பதவியேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.