சிக்கமகளூரு (கர்நாடகா): கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரு ஹகலகான் பகுதியைச் சேர்ந்தவர், இம்தியாஸ். இவரது மகன் எந்நேரமும் பப்ஜி விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் தந்தை, மகனை கண்டித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றும் மகன் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் வீட்டிற்கு வந்த இம்தியாஸ், மகனை கடுமையாகத் திட்டியுள்ளார். மேலும், துப்பாக்கியால் சுட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதையடுத்து, தாய் மைமுனா (40) இதில், தலையிட முயன்றபோது, ஆத்திரத்தில் இம்தியாஸ், மைமுனாவை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இம்தியாஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி- 11 பேர் கைது!