ETV Bharat / bharat

கர்நாடக அரசுப்பேருந்தில் பயணியை எட்டி உதைத்த நடத்துநர் - வைரலாகும் வீடியோ - சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்

கர்நாடக மாநிலத்தில் நேற்று(செப்- 7) அரசு பேருந்து ஒன்றில் பயணியை காலால் நெஞ்சில் மிதித்து நடத்துநர் கீழே தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.

Etv Bharatகர்நாடக அரசுப்பேருந்தில் பயணியை எட்டி உதைத்த  நடத்துநர் - வைரலாகும் வீடியோ

author img

By

Published : Sep 8, 2022, 12:01 PM IST

தட்சிண கன்னடா: கர்நாடகா மாநிலம் புத்தூர் தாலுகா ஈஸ்வரமங்களாவில் நேற்று கேஎஸ்ஆர்டிசி பேருந்து நடத்துநர் ஒருவர் பயணி ஒருவரின் மார்பில் உதைத்து சாலையில் தள்ளிய மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்தது. பயணியிடம் தவறாக நடந்து கொண்ட நபர், கண்டக்டர் சுப்புராஜ் ராய் எனத் தெரியவந்துள்ளது.

பேருந்தில் ஏறிய பயணி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. உடனே நடத்துநர் சுப்பையா பேருந்தில் ஏறும் போது பயணியை தடுத்து அவரது குடையை சாலையில் வீசியுள்ளார். இதையடுத்து பயணியை பஸ்சில் இருந்து கீழே இறங்குமாறு கண்டக்டர் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கண்டக்டர் அந்த பயணியை தாக்கி, இறுதியில் பயணியின் மார்பில் காலால் உதைத்து சாலையில் தள்ளினார்.

கர்நாடக அரசுப்பேருந்தில் பயணியை எட்டி உதைத்த நடத்துநர் - வைரலாகும் வீடியோ

நடத்துநர் சஸ்பெண்ட்: இச்சம்பவத்தை தொடர்ந்து புத்தூர் கே.எஸ்.ஆர்.டி.சி. மண்டல் கட்டுப்பாட்டு அலுவலர், ஜெயகர ஷெட்டி நடத்துநர் சுப்புராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் கூறுகையில், "பஸ்சில் இருந்தவர் எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்த நிர்வாகிக்கும் அதிகாரம் இல்லை. நிர்வாகி செய்தது தவறு என தெரிகிறது’ என்று ஈடிவி பாரத்திடம் அளித்த பேட்டியில் தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாக பரவியதால், பேருந்து நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:குடும்ப தகராறு காரணமாக 12ஆவது மாடியிலிருந்து மனைவி, மகளுடன் குதித்த கான்ஸ்டபிள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.