Bus Ticket for Chicken | சிவமூகா: கர்நாடகாவின் சிவமூகா மாவட்டத்தில் உள்ள ஹோசனகராவில் இருந்து ஷிரூரு என்னும் ஊருக்குச் செல்ல நாடோடி குடும்பமும் ஒன்று கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அரசுப் பேருந்தில் ஏறியுள்ளது.
குடும்பத்தினர், ஷிரூருவிற்கு மூன்று பயணச்சீட்டுகள் வாங்கிப் பயணித்துள்ளனர்.
பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, அவர்கள் வைத்திருந்த சின்ன பையிலிருந்து சத்தம் கேட்டுள்ளது. இதைக் கவனித்த பேருந்து நடத்துநர் அந்த பையில் என்ன உள்ளது கேட்டுள்ளார்.
அதில், கோழிக்குஞ்சு இருப்பதை அறிந்த நடத்துநர், அதற்கு அரை டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறி, அக்குடும்பத்தினரிடம் இருந்து 50 ரூபாய் வசூலித்துள்ளார். அந்த கோழிக்குஞ்சை உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள சிதாப்புரத்தில் 10 ரூபாய் கொடுத்து அவர்கள் வாங்கியுள்ளனர்.
அரசுப்பேருந்தில், கோழிகளுக்கும் பயணச்சீட்டு உண்டு என்ற விதிமுறை உள்ளது எனப் பேருந்து நடத்துநர் கூறியுள்ளார்.
இருப்பினும், 10 ரூபாய்க்கு வாங்கிய அந்த கோழிக்குஞ்சிற்கு 50 ரூபாய் பயணச்சீட்டு வசூலித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புத்தாண்டு விருந்துக்கு ஆடு திருடிய சப்-இன்ஸ்பெக்டர் கைது!