பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பேருந்துகளில் பயணிப்போர், ஸ்மார்ட்போன் மூலம் பாடல்கள், வீடியோக்கள் கேட்டு சக பயணிகளுக்கு இடையூறு செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்துவருகின்றன.
இதனிடையே, அரசு பேருந்தில் தூங்கிக்கொண்டிந்த பயணி ஒருவர், சக பயணியின் செல்போன் பாடலால், எரிச்சலடைந்து, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பேருந்துகளில் சத்தமாக பாடல்களை கேட்கவும், திரைப்படங்களை பார்க்கவும் தடைவிதிக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள், கர்நாடக அரசுக்கு சொந்தமான பேருந்துகளில் பயணிகள் தமது கைபேசியில் சத்தமாக பாடல்கள் கேட்கவும், திரைப்படங்களை பார்க்கவும் தடைவிதிக்கப்படுகிறது. இதை மீறுவோர் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்படுவதை மாநில போக்குவரத்துக்கழகம் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 104 வயதிலும் தேர்வில் டாப்பர்: கோட்டயம் குட்டியம்மாவின் சாதனை