கோட்டா: மத்தியப்பிரதேச மாநிலம், சிந்த்வாராவைச் சேர்ந்த 16 வயது மாணவர், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஐஐடி பயிற்சி மையத்தில் தங்கி, படித்து வந்தார்.
ஐஐடியில் சேர்வதற்காக அவர் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி மாணவர் பயிற்சிக்கு செல்லவில்லை. பிற்பகலில் அவரது நண்பர்கள் அறைக்கதவை தட்டியபோது மாணவர் திறக்கவில்லை. தூங்கிக் கொண்டிருப்பார் என நினைத்து நண்பர்கள் சென்றுவிட்டனர்.
மாலையில் நண்பர்கள் மீண்டும் கதவைத் தட்டியபோதும், கதவு திறக்கப்படாததால், விடுதிக் காப்பாளர்களை அழைத்துச் சென்று அறையைத் திறந்தனர். அப்போது மாணவர் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச்சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவரின் அறையில் தற்கொலைக் கடிதம் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். படிப்பில் தோல்வியடைந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
மாணவரின் தற்கொலைக் கடிதத்தில், "மன்னிக்கவும் அம்மா, அப்பா. நான் எதற்கும் தகுதியானவன் இல்லை. உங்கள் மகன் நிறைய போராடினான், ஆனால் அனைத்திலும் தோற்றுவிட்டான். உங்களது பணத்தை வீணாக்கியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி, நீங்கள் அண்ணனின் படிப்புக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும். என் காதல் உண்மையானது, ஆனால் அது ஒரு ஆண் மீதுதான் ஏற்பட்டது. நான் பவ்யாவை மிகவும் நேசிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்கொலை எண்ணத்தைக் கைவிடுங்கள்: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள்...
இதையும் படிங்க:ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு - திருப்பத்தூர் கல்லூரி மாணவர் கைது!