ETV Bharat / bharat

16 வயது சிறுவனை நிர்வாண பூஜை செய்ய வைத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு! - கொப்பலில் சம்பவம்

16 வயது சிறுவனை நிர்வாண பூஜை செய்ய வைத்து வீடியோ எடுத்த மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Koppala
Koppala
author img

By

Published : Oct 3, 2022, 5:10 PM IST

கொப்பல்: கர்நாடக மாநிலம், கொப்பல் தாலுகாவில் உள்ள ஹசகல் கிராமத்தைச்சேர்ந்த 16 வயது சிறுவனை வைத்து சரணப்பா, விருபான கவுடா, சரணப்பா தளவரா ஆகிய மூன்று பேர் நிர்வாண பூஜை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

சிறுவனின் குடும்பம் கடனில் சிக்கியிருந்ததால், நிர்வாண பூஜை செய்தால் கடன் பிரச்னை தீர்ந்துவிடும் என்றும், வறுமை நீங்கி பணம் கிடைக்கும் என்றும் கூறி, சிறுவனை மூளைச்சலவை செய்துள்ளனர். இதை நம்பிய சிறுவன் நிர்வாண பூஜை செய்ய ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, சிறுவனை தனியாக ஒரு அறைக்கு அழைத்துச்சென்று நிர்வாணமாக இருக்க செய்து, வழிபாடு நடத்தியுள்ளனர். அதை வீடியோவாகவும் எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சிறுவனின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, மனிதநேயம் இல்லாமல், சிறுவனை துன்புறுத்திய மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:இலங்கை அகதி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. விஏஓ கைது...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.