ETV Bharat / bharat

ரமோன் மக்சேசே விருதை நிராகரித்த கேரள முன்னாள் அமைச்சர்

author img

By

Published : Sep 4, 2022, 10:02 PM IST

கேரளாவின் முன்னாள் அமைச்சர் கே.கே. சைலஜா தனக்கு வழங்கவிருந்த ரமோன் மக்சேசே விருதைக் கட்சித் தலைமையின் ஆணைபடி நிராகரித்துள்ளார்.

ரமோன் மக்சேசே விருதை நிராகரித்த கேரளாவின் முன்னாள் அமைச்சர் கே.கே.சைலஜா..!

திருவனந்தபுரம்: தனக்கு வழங்கவிருந்த ரமோன் மக்சேசே விருதை கேரளாவின் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா மறுத்துள்ளார். கட்சியின் தலைமையின் முடிவிற்கு கீழ்படும் வகையில் இதை முன்னாள் அமைச்சர் செய்துள்ளார். கரோனா மற்றும் நிபா நோய்த் தொற்று காலங்களில் சிறப்பாக பணியாற்றியமைக்காக சைலஜாவிற்கு இந்த விருது வழங்கப்படவிருந்தது. ஆனால் இந்த விருதை ஒருங்கிணைக்கும் கமிட்டியிடும் தான் இந்த விருதைப் பெற முடியாது என கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.

64ஆவது மக்சேசே விருது விழாவில் இந்த விருதை முன்னாள் அமைச்சர் கே.கே சைலாஜாவிற்கு வழங்கவிருந்தனர். ஆனால், கரோனா தொற்று காலத்தில் பணியாற்றியதில் அரசின் அனைத்து செயல்களும் அடங்கும் என்றும், கம்யூனிஸ்ட்களை எதிர்த்த ஆட்சியாளரான ரமோன் மக்சேசே பெயரில் விருது வாங்குவதும் தங்கள் கட்சிக் கொள்கைக்கு சரியாக இருக்கது எனக் கருதி கட்சியின் தலைமை இத்தகைய முடிவை எடுத்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள் பலவும் கரோனா காலகட்டத்தில் சைலஜாவின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து எழுதியுள்ளது. இந்த ரமோன் மக்சேசே சர்வதேச விருதுகள் ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு தன்னலமற்று பொதுத் தளத்தில் பல்வேறு துறைகளில் சேவை செய்வதற்காக கொடுக்கப்படும் விருது. இந்த விருதைப் பெற்றிருந்தால், இந்த விருதைப் பெறும் ஐந்தாவது மலையாளியாகவும், முதல் மலையாளப் பெண்ணாகவும் கே.கே.சைலஜா விளங்கியிருப்பார்.

இதற்கு முன்பு, வர்கீஸ் குரியன், எம்.எஸ்.சுவாமி நாதன், பி.ஜி.வர்கீஸ், டி.என்.சேஷன் ஆகியோர் இந்த விருதைப் பெற்றிருந்தனர். ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இந்த விருதை எந்த ஒரு மலையாளியும் வாங்கவில்லை. சமூக சீர்திருத்தவாதிகளான வினோபா பாவே, அன்னை தெரசா, ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோரும் இந்த விருதை வாங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிபிஎம் பொதுச் செயலாளர் சிதாராம் யெச்சுரி கூறுகையில், கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான பல கொடூர செயல்களை ரமோன் மக்சேசே செய்துள்ளார். கரோனா காலகட்டத்தில் கே.கே.சைலஜா பணிபுரிந்ததை அவரது சொந்த சாதனையாகக் கட்சிப் பார்க்கவில்லை. இது அரசுடன் சேர்ந்து செய்த கூட்டு செயலே என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விருதை கேரள முன்னாள் அமைச்சர் கே.கே. சைலஜா, நிராகரித்த சம்பவம் வரலாற்றுப் பதிவாக தேசிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதையும் படிங்க: மோடியால் இரண்டு தொழிலதிபர்களுக்கு மட்டுமே லாபம்...! - ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.