உத்தரப் பிரதேசத்தின் 15 மாவட்டங்களைச் சேர்ந்த கிசான் சேனாவின் பிரதிநிதிகள், மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரைச் சந்தித்து புதிய வேளாண் சட்டங்களுக்கு தங்களது ஆதரவை வழங்கினர்.
மூன்று வேளாண் சீர்த்திருத்தச் சட்டங்களை எந்த நிபந்தனையிலும் ரத்துசெய்ய வேண்டாம் என்று மத்திய அரசிடம் கிசான் சேனாவின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லையில் கடந்த 30 நாள்களாக விவசாயிகளின் போராட்டம் நடந்துவருகிறது.
மறுபுறம், சட்டங்களை ஆதரிக்கும் பல விவசாய அமைப்புகளும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் மத்திய வேளாண்மை அமைச்சரைச் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துவருகின்றன.