முஷாபர்நகர்: புதிய வேளாண் சட்டங்களை கைவிடக் கோரி சன்யுக்த் கிசான் மொர்ச்சா அமைப்பின் தலைமையில் மாபெரும் பஞ்சாயத்து கூட்டம், உத்தரப் பிரதேச மாநிலம் முஷாபர்நகரில் நடைபெற்று வருகிறது.
சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 9 மாதங்களில் இதுதான் முதல் மாபெரும் விவசாயிகள் கூட்டன் என சன்யுக்த் கிசான் மொர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாரத விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், ஒன்றிய அரசு புதிய வேளாண் சட்டங்களை கைவிடவில்லை என்றால் இதுபோன்ற கூட்டங்கள் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெறும் என்றார்.
முன்னதாக இந்த மாபெரும் பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்துகொள்ள நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ராகேஷ் திகாயத் அழைப்பு விடுத்திருந்தார்.
உபி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இந்த விவசாயிகள் கூட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். விவசாயத்தை காக்க விவசாயிகள் நடத்தும் இந்த போராட்டத்தில் மொத்த நாடும் அவர்களுக்கு துணையாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய ஆர்எல்டி (ராஷ்டிரிய லோக் தால்) மூத்த தலைவர், விவசாயிகள் அமைப்பு தொடர்ந்து அரசாங்கத்தை எச்சரித்து வருகிறோம். இந்த மாபெரும் கூட்டம் வரலாற்று சிறப்புமிக்கது மட்டுமில்லாமல், விவசாயிகளின் ஒற்றுமையை காட்டுகிறது என்றார்.
சமாஜ்வாதி கட்சியின் மாவட்ட தலைவர் ராஜ்பல் சிங், இந்தக் கூட்டத்துக்கு பிறகு விவசாயிகளின் சக்தி என்ன என்பது அரசாங்கத்துக்கு புரியும் என தெரிவித்தார்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் அவ்னிஷ் கஜ்லா, காங்கிரஸ் விவசாயிகள் பக்கம் நிற்கிறது. காங்கிரஸ் கட்சியினர் இந்த மாபெரும் கூட்டத்தில் கலந்துள்ளனர் என்றார்.
இதையும் படிங்க: ரயிலில் உள்ளாடையுடன் திரிந்த எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!