ETV Bharat / bharat

Congress Election Vibes - கார்கே Vs தரூர் வெல்லப்போவது யார்? - காங்கிரஸ் தொண்டர்கள்

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கார்கே மற்றும் தரூர் இருவரது வெற்றி வாய்ப்பு குறித்த பேச்சுகள் எழுந்துள்ளன. காந்தி குடும்பத்தின் நம்பிக்கைக்குரியவரான கார்கே தலைவராக தேர்வு செய்யப்படுவார் என காங்கிரஸ் தொண்டர்கள் அனுமானிக்கின்றனர்.

kharge
kharge
author img

By

Published : Oct 17, 2022, 7:58 PM IST

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (அக். 17) நடைபெற்றது. முதல்முறையாக காந்தி - நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட இருப்பதால், இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எம்.பி சசி தரூர் போட்டியிட்டனர்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் உள்பட 65 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. சோனியா காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் டெல்லியில் வாக்களித்தனர். ராகுல்காந்தி கர்நாடகாவில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், நாளை மறுநாள் (அக்.19) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், அடுத்த தலைவர் யார்? என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் அனுமானிக்கத் தொடங்கியுள்ளனர். பிரச்சாரத்தின்போது காங்கிரசில் உள்ள இளைஞர்களை குறிவைத்து சசி தரூர் வாக்கு சேகரித்தார். கட்சியில் மாற்றத்தை விரும்புவோர் தரூருக்கு வாக்களித்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு காந்தி குடும்பத்தின் ஆதரவு இருப்பதால் அவர் தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் கார்கேவுக்கு 50 ஆண்டுகால அனுபவம் இருப்பதால், காங்கிரசின் கொள்கைகளையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க விரும்புவோர் கார்கேவுக்கு வாக்களித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் கார்கேவுக்கு ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சி பொருளாளர் பவன்குமார் பன்சால், மூத்த தலைவர் திக்விஜய் சிங், ப.சிதம்பரம், தாரிக் அன்வர், பிஎல் புனியா, ஏகே ஆண்டனி, பூபிந்தர் சிங் ஹூடா, சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் கார்கேவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மறுபுறம் சசி தரூருக்கு ஒரு சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். தலைவர் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய விரும்புவோர் கட்சிப் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என காங்கிரஸ் தலைமை கட்டுப்பாடு விதித்தது. அதன்படி, சையத் நசீர் உசேன், தீபேந்தர் ஹூடா, பேராசிரியர் கவுரவ் வல்லப் உள்ளிட்ட பலர், கார்கேவுக்கு பிரச்சாரம் செய்வதற்காக கட்சி பதவியை ராஜினாமா செய்தனர். இதுபோன்ற முயற்சியை சசி தரூருக்கு ஆதரவாக காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் எடுக்கவில்லை.

காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த ஆனந்த் சர்மா, மணீஷ் திவாரி போன்ற சில மூத்த தலைவர்களும் கார்கேவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதில் சுவாரஸ்யம் என்றவென்றால், காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த சசி தரூருக்கு இவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

கார்கே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் காங்கிரஸ் தலைவரானால் தேசிய அளவில் நிறைய பலன்கள் கிடைக்கும் என காங்கிரஸ் காய் நகர்த்தியதாக பேசப்பட்டது. இருந்தபோதும், கார்கே போன்ற ஒருவர் ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும் என ஹரியானாவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூக தலைவரான குமாரி செல்ஜா தெரிவித்திருந்தார்.

அதேபோல் சசி தரூருடன் ஒப்பிடுகையில் கார்கே, காந்தி குடும்பத்தின் நம்பிக்கைக்குரியவர். அதனால், கார்கே தலைவராக இருந்தால் அவரை அணுகுவதற்கு ஏதுவாக இருக்கும் என காந்தி குடும்பத்தினர் எண்ணுகிறார்கள், இந்த சுதந்திரம் தரூரிடம் கிடைக்காது.

இறுதியாக வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, ராகுல்காந்தியின் பாரத் ஜடோ யாத்திரையில் கார்கே கலந்து கொண்டார். இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு ராகுல்காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்டார். இருவரும் நடந்து வரும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்த நெட்டிசன்கள், கார்கே முகத்தின் வாயிலாக ராகுல்காந்தியே காங்கிரசுக்கு தலைமை தாங்க இருக்கிறார் என கருத்து தெரிவித்தனர். இந்த அனைத்து கோணங்களிலும், கார்கேதான் காங்கிரஸ் தலைவராவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இன்று கார்கேவும், தரூரும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இருவரில் யார் வெற்றி பெற்றாலும், பதிய தலைமையால் காங்கிரஸ் வலுப்பெறும் என இருவரும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் - தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.