ETV Bharat / bharat

100 நாள்கள் தீவிர தேடுதல்... 1300 கிமீ பயணித்து சிறுமியைக் கண்டுபிடித்த தெலங்கானா போலீஸ் - police rescued the girl in u.p

ஹைதராபாத்: தெலங்கானாவில் காணாமல் போன சிறுமியை, சுமார் 100 நாள்கள் தேடி அலைந்து காவல் துறையினர் கண்டுபிடித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

khammam police
ஹைதராபாத்
author img

By

Published : Mar 30, 2021, 4:08 PM IST

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் ரெமிடிசார்லா கிராமத்தில் கடந்தாண்டு டிசம்பர் 17ஆம் தேதி காணாமல் போன சிறுமியை, 100 நாள்கள் தீவிர தேடுதலில் தெலங்கானா காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கிடைத்த தகவலின்படி, சூனிய செயல்களில் ஈடுபடும் சூர்யபிரகாஷ் சர்மா என்பவர் தான், மாமா வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த சிறுமியை ஆசை வார்த்தையில் ஏமாற்றி பொறியில் சிக்க வைத்துள்ளார்.

அச்சிறுமியை தன்னுடன் உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று வைத்திருந்துள்ளார். சிறுமி உ.பி.,யில் இருப்பதாகத் தகவல் கிடைத்ததும், சுமார் 1300 கிமீ பயணித்து சிறுமியைப் பத்திரமாக மீட்டு வந்த தெலங்கானா காவல்துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதையும் படிங்க: பட்டப்பகலில் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.