அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அந்த வகையில் நேற்று (ஆகஸ்ட் 27) அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் நடைபெற்ற காதி விழாவில் பங்கேற்றார். இந்த காதி விழாவில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 7,500 பெண் காதி கைவினை கலைஞர்கள் பங்கேற்றனர். அப்போது 7,500 பெண்களும் ஒன்றாக ராட்டையை சுற்றி புதிய சாதனை படைத்தனர்.
அவர்களுடன் பிரதமர் மோடியும் ராட்டை சுற்றினார். 1920ஆம் ஆண்டுக்குப்பின் பல்வேறு தலைமுறைகளில் பயன்படுத்தப்பட்ட 22 ராட்டைகளின் கண்காட்சியும் நடைபெற்றது. நாடு முழுவதும் காதியை பிரபலப்படுத்தவும், காதி தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளைஞர்களிடையே காதியின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் இந்த விழா நடத்தப்பட்டது.
-
Khadi then- a symbol of our Independence movement under Gandhi Ji.
— Narendra Modi (@narendramodi) August 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Khadi now- a symbol of Aatmanirbhar Bharat. pic.twitter.com/hp4e3qs74F
">Khadi then- a symbol of our Independence movement under Gandhi Ji.
— Narendra Modi (@narendramodi) August 27, 2022
Khadi now- a symbol of Aatmanirbhar Bharat. pic.twitter.com/hp4e3qs74FKhadi then- a symbol of our Independence movement under Gandhi Ji.
— Narendra Modi (@narendramodi) August 27, 2022
Khadi now- a symbol of Aatmanirbhar Bharat. pic.twitter.com/hp4e3qs74F
அந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, "காதியின் நூலே சுதந்திர போராட்டத்திற்கு உத்வேகமாக அமைந்தது. நாட்டின் அடிமைச் சங்கிலியை உடைத்தெரிந்தது. சுதந்திர போராட்டத்தின் போது, நாட்டின் சுயமரியாதைச் சின்னமாக காதியை மகாத்மா காந்தி மாற்றினார். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு அதே காதி தரக்குறைவான பொருளாக கருதப்பட்டது.
இதன் காரணமாக, காதி மற்றும் காதியுடன் தொடர்புடைய கிராமத் தொழில்கள் அழிந்துபோயின. அது கோடிக்கணக்கான நெசவாளர்களை பாதித்தது. இப்போது அப்படியில்லை, இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் உறுதிமொழியை நிறைவேற்ற காதி உத்வேகமாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட்டில் அரசியல் நெருக்கடி... சொகுசு விடுதிக்கு பயணமாகும் எம்எல்ஏக்கள்...