பெங்களூரு: கன்னட திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், பல குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்த மோகன் ஜூனேஜா இன்று(மே 6) காலை உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மோகன் பிரபல கன்னட படமான கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இவருக்கு சில மாதங்களாக கல்லீரலில் கோளாறு இருந்து வந்துள்ளது. இதற்கு பெங்களூரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
![கன்னட நகைச்சுவை நடிகர் மோகன் ஜுனேஜா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20220507-wa0001_0705newsroom_1651897172_459.jpg)
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சொந்த ஊரான தம்மேனேஹல்லியில் மாலை இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தும்கூரில் இருந்து கன்னட திரை உலகில் வந்து பல வெற்றிபடங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கன்னட மொழி மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மீண்டும் தள்ளிப்போன ஜி.வி.பிரகாஷின் ஐங்கரன்..!