ETV Bharat / bharat

பொன் வேண்டாம் பொண்ணே போதும் - 'மாஸான' மாப்பிள்ளை

வரதட்சணை கொடுமை காரணமாக ஏற்படும் மரணங்கள் கேரளாவில் அதிகரித்துவருகிறது. இந்நிலையில்தான் கட்டிய தாலியுடன் மணமகளை அழைத்துச் சென்ற மணமகனின் செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

வரதட்சணையை திருப்பி கொடுத்த மணமகன்
வரதட்சணையை திருப்பி கொடுத்த மணமகன்
author img

By

Published : Jul 17, 2021, 8:19 PM IST

திருவனந்தபுரம்: வரதட்சணை கொடுமை காரணமாக ஏற்படும் மரணங்கள் கேரளாவில் அதிகரித்துவருவதைக் கருத்தில்கொண்டு ஆளும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

வரதட்சணையைக் கண்டித்து அண்மையில் கேரள ஆளுநர் ஆரீஃப் முகமது கான் நாள் முழுவதும் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். கேரள மாநில காவல் துறையினர் வரதட்சணை வாங்க மாட்டோம் என்ற இயக்கத்தையும் தொடங்கியுள்ளனர்.

வரதட்சணையை திருப்பி கொடுத்த மணமகன்
வரதட்சணையைத் திருப்பிக் கொடுத்த மணமகன்

இப்போது வரதட்சணை தடைச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில்தான் கட்டிய தாலியுடன் மணமகளை அழைத்துச் சென்ற மணமகனின் செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

எதுவுமே வேணாங்க

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த சதீஷ் சத்யனுக்கும், நூரனாட் பனாயிலைச் சேர்ந்த சுருதி ராஜுக்கும் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் மணமகள் சுருதி அணிந்திருந்த 50 பவுன் நகைகளைக் கழற்றி அவரின் பெற்றோரிடத்தில் மணமகன் சதீஸ் ஒப்படைத்துள்ளார்.

பின்பு தான் கட்டிய தாலியுடன் தன் மனைவியை அழைத்துச் சென்ற மணமகன் தனக்கு வரதட்சணை வேண்டாம் என்றும் தெரிவித்தார். இவரது செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 'வேட்டியில் மணமகள்.. வெட்கத்தில் மணமகன்..' - ஆந்திராவில் வினோத திருமணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.