கேரள மாநிலத்தில், கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று (ஏப்.26) ஒரே நாளில் 21 ஆயிரத்து 890 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில், ஆயிரத்து 508 பேர் அறிகுறிகள் இல்லாத கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாவட்டங்களிலிருந்து வந்த 230 பேருக்குக் கரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 நான்கு மணி நேரத்தில் மட்டும் புதிதாக 96,378 பேருக்குக் கரோனா மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. கரோனாவால் பாதிக்கப்பட்ட 28 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 138 பேராக உயர்ந்துள்ளது.