இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் நெருங்கிய உறவில் இருந்ததாகக் கூறி கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி.ஜெலில் சுங்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ அலுவலர்களால் சில நாள்களுக்கு முன்பு விசாரிக்கப்பட்டார்.
இதற்கிடையில், தற்போது தனிநபர் பயன்பாட்டிற்காக சுங்கத்துறை விதிகளை மீறி பேரிட்சை பழங்களையும், குரான் புத்தகங்களையும் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, கே.டி. ஜலீலை கேரள சுங்கத்துறை அலுவலர்கள் சுமார் ஆறரை மணி நேரம் விசாரணை நடத்தினர். நேற்று காலை 11.45 மணிக்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட அவர் மாலை 6.30 மணிவரை விசாரிக்கப்பட்டார்.
பின்னர் இந்த விசாரணை தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த ஜலீல், அனைவரும் கருத்து தெரிவிப்பதால் எதுவும் வீணாகப்போவதில்லை. ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தேடி வந்தாலும், கேரள தங்கக் கடத்தல் வழக்கில் எனக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க இயலாது. வாய்மையே வெல்லும். நான் எவ்வித தவறையும் இதுவரை புரியவில்லை என்றார்.
இதையடுத்து, கேரள சுங்கத்துறை அலுவலர்கள் அரபு நாடுகளிலிருந்து கேரளாவிற்கு வந்த 250 பேக்கேஜ்களில் 32ஐ ஜலீலிற்கு விதிகளை மீறி கொடுத்ததாகவும், அவருக்கு வழங்கப்பட்ட குரான் வெவ்வேறு எடைகளை கொண்டிருப்பதாகவும் கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரள தங்கக் கடத்தல் வழக்கு: 4 பேருக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்!