ETV Bharat / bharat

ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்த ஜோஸ் கே. மணி! - இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி

திருவனந்தபுரம் : கேரளா காங்கிரஸ் (எம்) தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜோஸ் கே. மணி தனது ராஜினாமா கடிதத்தை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் வழங்கினார்.

ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்த ஜோஸ் கே. மணி!

author img

By

Published : Jan 9, 2021, 5:49 PM IST

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியிலிருந்து விலகி ஆளும் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி கூட்டணியில் அண்மையில் கேரளா காங்கிரஸ் (எம்) கட்சி இணைந்தது.

இந்நிலையில், யூ.டி.எஃப் கூட்டணியில் அங்கம் வகித்துவந்தபோது, கேரளா காங்கிரஸ் (எம்) கட்சிக்கு வழங்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவியில் அக்கட்சியின் தலைவர் ஜோஸ் கே. மணி தொடர்ந்து நீடித்துவந்ததைக் காரணமாகக் காட்டி, காங்கிரஸ் கமிட்டி அவரை கடுமையாக விமர்சித்து வந்தது.

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜோஸ் கே. மணி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், இன்று (ஜனவரி 9) அவர் தனது பதவி விலகல் கடிதத்தை மாநிலங்களைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் வழங்கினார்.

எதிர்வரும் கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாலா தொகுதியில் போட்டியிடுவதற்காக கேரளா காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே. மணி தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தற்போது காலியாகியுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இருக்கையை கேரள மாநில காங்கிரஸுக்கு யூ.டி.எஃப் கூட்டணி வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்த ஜோஸ் கே. மணி!
ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்த ஜோஸ் கே. மணி!

ஜோஸ் கே. மணியின் பதவி விலகல் முடிவை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்றுள்ளார். அத்துடன், மணியின் இந்த முடிவானது கேரள மாநிலத்தில் ஜனநாயகம், சமத்துவம், மதசார்பற்ற ஆற்றல்களுக்கு கூடுதல் பலத்தை வழங்கும் என கூறியுள்ளார்.

மத்திய திருவிதாங்கூரில் பெரும் செல்வாக்கைக் கொண்டுள்ள கேரளா காங்கிரஸ் (எம்) கிறிஸ்தவ மக்களிடையே ஒரு வலுவான தளத்தைக் கொண்ட கட்சியாகும். அக்கட்சியின் கூட்டணி, எல்.டி.எஃப்க்கு சிறுபான்மையினரின் ஆதரவை பெற உறுதுணை நிற்குமென நம்பப்படுகிறது.

இதையும் படிங்க : ஹைதராபாத்தில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்குச் சீல்வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.