திருவனந்தபுரம்: கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு துறை ரெட், ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இன்று எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், காசரகோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், பத்தினம்திட்டா, கோட்டயம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (ஜூலை 11) மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசரகோடுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடிக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடுக்கு குறைந்தபட்ச எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 12ஆம் தேதி கன்னூர், காசரகோடுக்கு மட்டும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடுமையான மழைப் பொழிவு இருக்கும் என நேற்று இந்திய வானிலை ஆய்வு துறை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேரளா, மகாராஷ்டிராவில் கரோனா பரவல் அதிகரிப்பு - விரையும் மத்திய குழு