ETV Bharat / bharat

காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கு: கைதான இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி! - கேரள நரபலி வழக்கு

காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளம்பெண், போலீஸ் காவலில் இருக்கும்போதே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Kerala
Kerala
author img

By

Published : Oct 31, 2022, 5:52 PM IST

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாரசாலாவைச்சேர்ந்த ஷரோன்(23) என்ற இளைஞரை, அவரது காதலியான கிரீஷ்மா(22) தனது குடும்பத்துடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 25ஆம் தேதி ஷரோன் உயிரிழந்தார். இதையடுத்து காதலி கிரீஷ்மாவை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ஷரோனும், கிரீஷ்மாவும் காதலித்து வந்த நிலையில், கிரீஷ்மாவின் குடும்பத்தினர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிவு செய்தனர். மேலும், கிரீஷ்மா முதலில் திருமணம் செய்யும் நபர் இறந்துவிடுவார் என்றும், இரண்டாவதாக மணம் முடிப்பவருடன்தான் வாழ்க்கை நிலைக்கும் என்றும் ஜோதிடர் கூறியதாக கிரீஷ்மாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜோதிடத்தின்படி காதலன் ஷரோனை திருமணம் செய்தால், அவர் இறந்துவிடுவார் என்றும், அதன் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதை நம்பிய கிரீஷ்மா குடும்பத்துடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். அதன் ஒரு பகுதியாக ஷரோனை யாருக்கும் தெரியாமல் தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. பின்னர் தனது குடும்பத்துடன் சேர்ந்து திட்டமிட்டு, ஷரோனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து கொலை செய்ததாக கிரீஷ்மா, தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், போலீஸ் காவலில் இருந்த கிரீஷ்மா தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிரீஷ்மா காவல் நிலைய வளாகத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், தற்போது உடல்நிலை சீராக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: காதலனை விஷம் வைத்துக்கொன்ற காதலி - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.