ETV Bharat / bharat

தந்தையால் கர்ப்பமான சிறுமி: 31 வார கருவைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி - 10 வயது சிறுமியின் 30 வார கருக்கலைப்பு

தந்தையால் கர்ப்பமான 10 வயது சிறுமியின் 31 வார கருவைக் கலைக்க அனுமதி அளித்து கேரள உயர் நீதிமன்றம் நேற்று (மார்ச் 11) உத்தரவிட்டுள்ளது.

தந்தையால் கர்ப்பமான சிறுமி
தந்தையால் கர்ப்பமான சிறுமி
author img

By

Published : Mar 11, 2022, 7:59 PM IST

எர்ணாகுளம்: கேரள உயர் நீதிமன்றம் நேற்று (மார்ச் 11) வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. தந்தையால் கர்ப்பமான 10 வயது சிறுமியின் 31 வார கருவை கலைக்கக்கோரி, அச்சிறுமியின் தாயார் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்த உயர் நீதிமன்றம், மருத்துவக்குழு ஒன்றை அமைத்தது. மேலும், சிறுமியின் 31 வார கருவினைக் கலைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவக்குழுவை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

உயிர்ப்புடன் வெளிவர வாய்ப்பு

இதையடுத்து, அறிக்கைத் தாக்கல் செய்த மருத்துவக்குழு, சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, அறுவை சிகிச்சை மூலம் கருவை வெளியே எடுக்கலாம் எனக் கூறியது. மேலும், 31 வார கருவை வெளியே எடுத்தால், அது உயிருடன் இருப்பதற்கு 80 விழுக்காடு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தது.

வெளியே எடுக்கப்பட்ட பின், அக்குழந்தை உயிருடன் இருந்தாலும் அதற்கு நரம்பியல் ரீதியான பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் குழு எச்சரித்துள்ளது.

அரசு பொறுப்பேற்க வேண்டும்

இதையடுத்து, மாணவிக்கு சிகிச்சை அளிப்பதற்கான முடிவை மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைத்துள்ள நீதிமன்றம், 31 வார கருவை திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் வைத்து கலைக்க அனுமதியளித்துள்ளது.

மேலும், ஒருவேளை குழந்தை உயிருடன் வெளியே எடுக்கப்பட்டால், குழந்தைக்கும், தாய்க்கும் உரிய மருத்துவ வசதியை அளிக்க மருத்துவமனை உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மனுதாரர் (சிறுமியின் தாய்) பொறுப்பேற்க முடியவில்லை என்றால், அரசு அல்லது பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை பொறுப்பேற்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த தீர்ப்பால் மக்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என சிறுமியின் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்த நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

24 வாரத்திற்கு மேலான கருவைக் கலைப்பது இந்தியாவில் சட்டவிரோதமானதாகும். எனவே, மருத்துவர்கள் தனது மகளின் கருவைக் கலைக்க மறுப்பதாக சிறுமியின் தாயார் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் காட்டு யானை தாக்கி இரு முதியவர்கள் பலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.