திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் ஹெச்5என்1 வைரஸால் பறவைக் காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பரவல் உறுதி செய்யப்பட்ட பகுதிகளிலுள்ள கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அரசின் இந்த நடவடிக்கையால் பறவைகள் வளர்ப்புப் பண்ணைகள் வைத்துள்ள உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பறவைக் காய்ச்சல் தொடர்பாக நடைபெற்ற அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், பிறந்து இரண்டு மாதங்களுக்கு மேலான பறவைகளுக்கு தலா 200 ரூபாயும், இரண்டு மாதத்திற்கு குறைந்த வயதுடைய பறவைகளுக்கு தலா 100 ரூபாயும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அழிக்கப்படும் கோழி முட்டைகளுக்கு தலா 5 ரூபாயும் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் நிபுணர்கள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பறவைக் காய்ச்சல் பதற்றம் வேண்டாம்; முட்டை, கறியை நன்கு சமைத்தால் போதும் - கிரிராஜ் சிங்