ETV Bharat / bharat

உயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரல் தானம் செய்த 17 வயது மகள்.. புது சாதனை படைத்தார்!

நாள்பட்ட கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த தந்தைக்கு, கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கிய 17 வயது மகள், நாட்டிலேயே மிக குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற சிறப்பை பெற்றார்.

கல்லீரல் தானம்
கல்லீரல் தானம்
author img

By

Published : Feb 20, 2023, 1:47 PM IST

எர்ணாகுளம்: கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீஷ். டீக் கடை நடத்தி வரும் பிரதீஷ்க்கு தீராத வயிற்று வலி இருந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவர்களை அணுகாமல் அருகாமை மருந்தகத்தை அணுகிய பிரதீஷ்க்கு தீர்வு காணாமல் தொடர் வயிற்று வலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜீரண கோளாறு மற்றும் உடல் நிலை மோசம் காரணமாக பிரதீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரதீஷ்க்கு கல்லீரலில் தொற்று இருப்பதாகவும், நாள்பட்ட நோய் காரணமாக உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பிரதிஷின் குடும்பத்தின் தலையில் இடியாய் விஷயம் விழ, அறுவை சிகிச்சைக்கான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனர். கல்லீரல் தானம் வழங்கும் நபரை தேடி அலைந்த குடும்பத்தினருக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. பிரதீஷின் ரத்த மாதிரிகளுடன் ஒத்துப் போகும் கல்லீரல் தானம் செய்யும் நபரை அவரது குடும்பத்தினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், தன் தந்தையின் அவலத்தைப் போக்க அவரது 17வயது மகள் தேவனந்தா கல்லீரல் தானம் செய்ய முன்வந்துள்ளார். இந்திய மனித உறுப்பு மாற்றுச் சட்டம் 1994-இன் படி 18 வயதிற்குக் குறைந்தவர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதால், தன் தந்தையின் உயிரைக் காக்க நீதிமன்றத்தில் தேவனந்தா முறையிட்டுள்ளார்.

பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவே, உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்ட தேவன்ந்தா, தனது தந்தைக்குக் கல்லீரல் தானம் செய்ய தகுதி பெற்றவர் என்பவருக்கான சான்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனிடையே மருத்துவர்கள் குழு தேவனந்தா கல்லீரல் தானம் செய்வது குறித்து ஆய்வு நடத்தி முறையான அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேவனந்தா கல்லீரல் தானம் செய்ய மருத்துவர்கள் குழு ஒப்புதல் அளித்த நிலையில், நீதிமன்றம் சிறப்பு அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த 9 ஆம் தேதி பிரதீஷ்க்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 17வயது மகள் தேவானந்தாவின் கல்லீரலில் ஒரு பகுதியை எடுத்து அவரது தந்தைக்கு மருத்துவர்கள் பொருத்தினர்.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தந்தையும் மகளும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நாள்பட்ட கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த தந்தைக்குத் தனது கல்லீரலில் ஒரு பகுதியைத் தானமாக வழங்கிய 17வயதான தேவனந்தா, இதன் மூலம் நாட்டிலே குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற சிறப்பை பெற்றார்.

இதையும் படிங்க: கணவன், மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய மருமகள்.. நாடகம் அம்பலமானது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.