திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் உள்ள பிராணவாயு இருப்பு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் துரித கட்டுபாட்டு அறையை அம்மாநில அரசு திறந்துள்ளது.
காவல் துறை, சுகாதாரத் துறை, போக்குவரத்து துறை, பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவற்றை குழுக்களாக ஒன்றிணைத்து இந்த கட்டுப்பாட்டு அறை கட்டமைக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில், சுமார் 80 இடங்களில் இத்தகைய சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் பிராணவாயு இருப்பு , மற்றும் அதன் தேவை குறித்து அறிந்து, செயல்படுத்த தொடங்கியுள்ளது கேரள அரசு.
பிராணவாயுவை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு யாராவது இடையூறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிராண வாயு கொண்டு செல்லும் அவசர ஊர்திகள் வந்தால், அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், என்பன போன்ற பல்வேறு விதிகமுறைகளையும் அம்மாநில அரசு வகுத்துள்ளது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அரசின் இந்த திட்டத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.