திருவனந்தபுரம்: கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்தவர் எம். சிவசங்கர். இவர் மீது தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டு எழுந்தது. இந்நிலையில், முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறையினர் கைது செய்து இவரை சிறையில் அடைத்துள்ளனர். இவர் மீது மேலும் சில வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. மத்திய புலனாய்வு அமைப்பினர் (சிபிஐ) மட்டுமின்றி அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக் மேனன் தலைமையிலான ஒற்றை அமர்வு, சிவசங்கருக்கு இன்று பிணை வழங்கி உத்தரவிட்டது.
முன்னதாக எம். சிவசங்கரின் பிணை மனு கடந்த அக்டோபர் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னா சுரேஷ் உடன் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சிவசங்கர் மீது அமலாக்கத்துறையினர் குற்றஞ்சாட்டை முன்வைத்துள்ளனர்.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 5ஆம் தேதி 30 கிலோ 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.14.82 கோடி ஆகும்.
இதையும் படிங்க: '5 நாள் காவல் முடிவடைந்த நிலையில், 7 நாள் காவல்'- அமலாக்கத்துறை பிடியில் சிவசங்கர்!