லட்சத்தீவுகளின் நிர்வாகியாக மத்திய அரசு நியமித்த பிரஃபுல் கோடாவின், நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோவா வளர்ச்சியின் பேரில், அவர் எடுத்த நடவடிக்கை கடும் விமர்சனங்களுக்கு ஆளாகின. இதையடுத்து லட்சத்தீவு நிர்வாகியை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென அம்மாநில பாஜக உட்பட பல கட்சிகள் கோரிக்கை விடுத்துவருகின்றன.
இந்நிலையில், லட்சத்தீவு நிர்வாகியைத் திரும்பப் பெறக்கோரி, கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், "லட்சத்தீவு மக்கள் அவர்களது வாழ்வாதாரத்தைக் காக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், லட்சத்தீவு விவகாரத்தில் தலையிட்டு மக்களின் நலனைக் காப்பது மத்திய அரசின் கடமை" என்று தெரிவித்தார்.