வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடிவருகின்றனர். இதற்கிடையே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று (டிச. 30) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இதனையடுத்து விவசாயிகளுடனான இந்தப் பேச்சுவார்த்தை திருப்தி அளிப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று (டிச. 31) மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை திருப்தி - மத்திய வேளாண்துறை அமைச்சர்