ETV Bharat / bharat

கரோனா கட்டுபாடுகளை மீறி கிறிஸ்துமஸ் பார்டி நடத்திய ஆயிரம் பேர் மீது வழக்கு - கிறிஸ்துமஸ் பார்டி நடத்திய ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு

கேரளாவில் கரோனா கட்டுபாடுகளை மீறி, கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தியதாக, ஆயிரம் பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரோனா கட்டுபாடுகளை மீறி கிறிஸ்துமஸ் பார்டி

author img

By

Published : Dec 26, 2020, 6:20 PM IST

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பொலியூரில், யூத் கலெக்டிவ் எனும் அமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் மாநில அரசின் கரோனா வழிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரம் பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், நிகழ்ச்சியில் பயன்படுத்திய இசைக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முறைப்படி காவல் துறை அனுமதியைப் பெற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரிட்டனில் வீரியமிக்க புதிய வகை கரோனா பரவி வரும் நிலையில், அந்நாட்டிலிருந்து கேரளா திரும்பிய எட்டு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநில அரசு சார்பில் கடுமையான கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறுகையில், "சுகாதாரத்துறை முழு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உருமாற்றமடைந்த கரோனா வைரஸ் கண்டறியப்பட்டால், அது மிகப்பெரும் ஆபத்தாக முடியும். எனவே பெறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: இங்கிலாந்தில் இருந்து சேலம் வந்த 26 பேருக்கு கரோனா பரிசோதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.