சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சி இது தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தேர்தல் அலுவலர் கெடுவிதித்துள்ளார். 24 மணி நேரத்திற்குள் பதிலை தாக்கல்செய்யத் தவறினால் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
பஞ்சாப் உள்ளிட்ட ஐந்த மாநிலத் தேர்தல்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தீவிரப் பரப்புரை நடைபெற்றுவருகின்றன. மேலும், தேர்தல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்து கண்காணித்துவருகின்றது.
கெஜ்ரிவால் தேர்தல் விதிமீறல்
இந்த நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி வேட்பாளர் பகவந்த் மன்னை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் வீடு வீடாகச் சென்று பரப்புரையில் ஈடுபட்டார் (பகவந்த் மன் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும்கூட).
தேர்தல் விதிமுறைகளின்படி, கட்சிகள் வீடு வீடாகப் பரப்புரை மேற்கொண்டால் ஐந்து நபர்களுக்கு மிகாமல்தான் செல்ல வேண்டும். ஆனால், கெஜ்ரிவால் தலைமையில் ஐந்திற்கும் மேற்பட்ட கட்சியினர் சென்று தேர்தல் நடைமுறையை மீறியதாகக் கூறப்படுகிறது.
ஜனவரி 15ஆம் தேதிவரை அரசியல் கட்சிகள் பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட கூட்டம் கூடும் நிகழ்வுகள் நடத்தக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வீடு வீடாகச் சென்று மட்டும் வாக்குச் சேகரிக்க வேண்டும் (ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி).
ஆம் ஆத்மியில் பாடகர் வேட்பாளர்
பிப்ரவரி 14ஆம் தேதி பஞ்சாபில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் மொகாலி மாவட்டம் காரர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாடகர் அன்மோல் ககன் மன் என்பவர் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பஞ்சாப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!