ETV Bharat / bharat

ஸ்ரீநகரில் 3 ஹைபிரிட் பயங்கரவாதிகள் கைது - ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 3 ஹைபிரிட் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Kashmir police arrest three hybrid militants in Srinagar

author img

By

Published : Nov 20, 2022, 3:55 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷால்டெங் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் பயங்கர ஆயுதங்களுடன் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ஹைபிரிட் பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து ஷால்டெங் போலீசார் தரப்பில், ஸ்ரீநகரில் 3 ஹைபிரிட் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது அடையாளங்கள் குறித்து விசாரணை நடந்துவருகிறது. அவர்களிடம் இருந்து 3 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், 9 மேகஷைன்கள், 200 ரவுண்டு குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்த்தில் உள்ள பிஜ்பெஹாராவின் செக்கி டுடூ பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜம்முவில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சுட்டுக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.